சென்கோப்டெக்ஸில்கலெக்டர் திடீர் ஆய்வு
சென்கோப்டெக்ஸில்கலெக்டர் திடீர் ஆய்வுசென்னிமலை, :சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (சென்கோப் டெக்ஸ்) பி.ஆர்.எஸ்., ரோட்டில் செயல்படுகிறது. ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இங்கு நேற்று ஆய்வு மேற்கொண்டார். சங்கத்தில் நெசவு செய்யப்படும் துணி ரகங்களை பார்வையிட்டார். குடோனில் நெசவுப் பணி, தார்சுற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களை சந்தித்து குறை கேட்டறிந்தார். சென்கோப்டெக்ஸ் சங்க தலைவர் திருநாவுக்கரசு, கைத்தறி ஆய்வாளர் குரு ஆதிசேஷன், சங்க இயக்குனர்கள் உடனிருந்தனர்.