உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தக்காளி விலை வீழ்ச்சிஇலவசமாக வழங்கிய

தக்காளி விலை வீழ்ச்சிஇலவசமாக வழங்கிய

தக்காளி விலை வீழ்ச்சிஇலவசமாக வழங்கிய பா.ரெட்டிப்பட்டி விவசாயி பாப்பிரெட்டிப்பட்டி:--தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி, கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 1,000 ஏக்கரில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பாப்பிரெட்டிப்பட்டி சந்தையில் கிலோ, 10 ரூபாய்க்குவிற்ற தக்காளி நேற்று, 5 ரூபாய்க்கு விற்றது. இதனால் தக்காளி சாகுபடி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து, அலமேலுபுரத்தை சேர்ந்த விவசாயி சிவராஜ் கூறியதாவது: கடந்த, 6 ஆண்டுகளாக தக்காளி சாகுபடி செய்கிறேன். என், 3 ஏக்கர் நிலத்தில், 3 லட்சம் ரூபாய் செலவு செய்து தக்காளி சாகுபடி செய்துள்ளேன். ஆனால், 20,000 ரூபாய் கூட வரவில்லை. சில்லரை கடைகளில் கிலோ, 20 ரூபாய் என தக்காளி விற்கப்படுகிறது. ஆனால் எங்களிடம், வியாபாரிகள், கிலோ ஒரு ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். அறுவடைக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் மக்கள் கேட்டால், இலவசமாக தக்காளியை கொடுக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !