உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரி கோவிலில்விழா ஏற்பாடு ஆய்வு

பண்ணாரி கோவிலில்விழா ஏற்பாடு ஆய்வு

பண்ணாரி கோவிலில்விழா ஏற்பாடு ஆய்வு சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா அடுத்த மாதம், ௮ம் தேதி அதிகாலை தொடங்கி நடக்கிறது. இதையொட்டி நடந்து வரும் ஏற்பாடுகளை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று பார்வையிட்டார். குடிநீர் வசதி, பஸ் வசதி, பந்தல் அமைத்தல், மருத்துவ குழு, தற்காலிக தடுப்பு சுவர் அமைத்தல், தடையில்லா மின்சாரம், துாய்மை பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, செயல் அலுவலர் மேனகா, சத்தி டி.எஸ்.பி.,முத்தரசு மற்றும் வருவாய், வனத்துறையினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி