உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்ஈரோடு:ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தலைமையில், கூட்டுறவு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு குழு மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான கூட்டம் நடந்தது.இதில், கூட்டுறவு துறை மூலம் செயல்படும் திட்டங்கள் பற்றி விளக்கினர். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கை, கருத்துக்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. சில கோரிக்கைகள், நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது.ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் செல்வகுமரன், துணை பதிவாளர்கள் காலிதாபானு, முத்துசிதம்பரம், மாதேஸ், அஜித்குமார் ஆகியோர் பேசினர். நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ