குவாரி குத்தகை உரிமம்:விண்ணப்பிக்க அழைப்பு
குவாரி குத்தகை உரிமம்:விண்ணப்பிக்க அழைப்புஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, நம்பியூர், சத்தி, தாளவாடி தாலுகாக்களில் கிராவல், சாதாரண கற்கள், கிரானைட், குவார்ட்ஸ், பெல்ஸ்பர் கனிமங்களுக்கு, உரிமம் வழங்கப்பட்டு குவாரி பணி நடக்கிறது.இதற்கான வழித்தட சீட்டுகளை வரும், 15ம் தேதி முதல் mimas.tn.gov.inஇணைய முகவரியில் விண்ணப்பித்து, உரிய சீட்டுகளை பெற்று கனிமம் எடுத்து செல்லப்பட வேண்டும். இணைய வழியாக மட்டுமே குத்தகைதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.மாவட்டத்தில் வரும், 28 முதல் அரசு புறம்போக்கு, தனி நபர் பட்டா நிலங்களில் உள்ள பல்வேறு வகையான கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம், mimas.tn.gov.inஇணையதளம் வாயிலாக மட்டுமே குவாரி குத்தகை கோரும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.