மேலும் செய்திகள்
போலீஸ் எஸ்.ஐ., நல்லடக்கம்
13-Mar-2025
அடையாளம் தெரியாதபெண்ணின் உடல் நல்லடக்கம்கோபி:தடப்பள்ளி வாய்க்காலில் மிதந்த, அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை கோபி போலீசார் நேற்று நல்லடக்கம் செய்தனர்.கோபி அருகே சவுண்டப்பூரில், தடப்பள்ளி வாய்க்காலில் கடந்த, 7ம் தேதி காலை, 8:00 மணிக்கு அழுகிய நிலையில் மிதந்த, 55 வயது மதிக்கத்தக்க பெண்ணில் உடலை கோபி போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அது குறித்து, சவுண்டப்பூர் கிராம வி.ஏ.ஓ., ஸ்ரீதரன், 33, கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், அந்த பெண்ணின் எந்த விபரமும் தெரியாததால், அரசு மருத்துவமனையில் இருந்த பெண்ணின் உடலை, கோபி மயானத்தில் போலீசார் நேற்று மாலை நல்லடக்கம் செய்தனர்.
13-Mar-2025