உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குளியலறையில் மயங்கிவிழுந்த வாலிபர் சாவு

குளியலறையில் மயங்கிவிழுந்த வாலிபர் சாவு

குளியலறையில் மயங்கிவிழுந்த வாலிபர் சாவுஈரோடு:ஈரோடு, மூலப்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல், 26; கட்டட சென்ட்ரிங் தொழிலாளி. இவரின் காதல் மனைவி வைஷ்ணவி. தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. சக்திவேலுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இரு நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். குளியலறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வராததால், அவரின் தந்தை உள்ளே சென்று பார்த்தபோது, சக்திவேல் மயங்கி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை