உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்குவரத்து ஓய்வூதியர் போராட்டத்துக்கு ஆதரவு

போக்குவரத்து ஓய்வூதியர் போராட்டத்துக்கு ஆதரவு

ஈரோடு, அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம்-சி.ஐ.டி.யு., சார்பில் ஈரோடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், ஆறாம் நாளாக காத்திருப்பு போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. மண்டல நிர்வாகி இளங்கோ தலைமை வகித்தார். தேர்தலின் போது தி.மு.க., அறிவித்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழுவினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பங்கேற்றனர். போராட்டத்தில், 30 பெண்கள் உள்ளிட்ட, 80 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ