உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசுப்பள்ளி மாணவியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

அரசுப்பள்ளி மாணவியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

காங்கேயம், காங்கேயம் அருகே நெய்க்காரன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும், 35க்கும் மேற்பட்ட மாணவியருக்கு, சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. வளரிளம் பெண் குழந்தைகள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.இதை சரி செய்ய ஒவ்வொரு மாதமும் ஒரு அரசு பள்ளியை தேர்ந்தெடுத்து, அங்கு பயிலும் அனைவருக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி வருகின்றனர். இதன்படி இந்தப்பள்ளிக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ