பச்சைமலையில் பங்குனி உத்திர கொடியேற்றம்
கோபி:பங்குனி உத்திர தேர் திருவிழாவை முன்னிட்டு, கோபி அருகே பச்சைமலை முருகன் கோவிலில், கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடந்தது. முனனதாக நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா, கிராம சாந்தியுடன் நேற்று முன்தினம் இரவு துவங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு, காப்பு கட்டுதல், கொடியேற்றம், யாகசாலை பூஜை, பூத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.