உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொதுத்தேர்வில் சிறப்பிடம் மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு

பொதுத்தேர்வில் சிறப்பிடம் மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு

ஈரோடு:ஈரோடு வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2026ம் ஆண்டு பிளஸ் ௨ தேர்வில், சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர் இளங்கோ, முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். இதேபோல் 10ம் வகுப்பில் சிறந்த மாணவியருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை சிறப்பாக செயல்பட்ட மாணவிகளுக்கு, முழு ஆண்டுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கவுரவம் செய்யப்பட்டது. நிகழ்வில் பள்ளி செயலாளர் சிவானந் தன், தாளாளர் கணேசன், தலைமையாசிரியை கவிதா, ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை