உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆக., 15 முதல் 18 வரை மாநில மாநாடுஇ.கம்யூ., மாநில செயலர் தகவல்

ஆக., 15 முதல் 18 வரை மாநில மாநாடுஇ.கம்யூ., மாநில செயலர் தகவல்

ஆக., 15 முதல் 18 வரை மாநில மாநாடுஇ.கம்யூ., மாநில செயலர் தகவல்ஈரோடு:ஈரோட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. வட்ட செயலர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் பிரபாகரன் வரவேற்றார்.மாநில செயலர் முத்தரசன் பேசியதாவது: இந்தியாவில் எந்த கட்சிக்கும் இல்லாத அடக்கு முறை, இ.கம்யூ., கட்சிக்கு இருந்தது. மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது. சிலர் சிறையிலும், சிலர் தலைமறைவு வாழ்க்கையிலும் வாழ்ந்தனர். பலர், 14 முதல், 20 ஆண்டுகள் சிறையில் இருந்தனர். இந்த இயக்கத்துக்காக பாடுபட்ட, துப்பாக்கி சூட்டில் இறந்து போன, தலைவர்களாக வழி நடத்தியவர்கள் தியாகிகளாக உள்ளனர். யானைக்கு தன் பலம் தெரியாது என்பது போல, இ. கம்யூ., கட்சியின் பலத்தை, செல்வாக்கை அறிந்தவர்கள் இல்லை. கட்சியில் உள்ள நாமே, பலத்தை முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. இந்த நுாற்றாண்டை முன்னிட்டு, வரலாற்று நுால் வெளியிடப்பட்டுள்ளது. இதை படித்தால், அறியலாம். தெரிந்த, தெரியாத தகவல்களை சேகரித்து வெளியிட முயன்றுள்ளோம். கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் ஆக., 15, 16, 17, 18 என நான்கு நாட்கள் நடக்க உள்ளது. இவ்வாறு பேசினார்.என்.சி.பி.எச்., தலைவர் ஸ்டாலின் குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, முன்னாள் மாவட்ட செயலர்கள் செல்வராஜன், சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !