இளம்பெண் உள்பட2 பேர் தற்கொலை
இளம்பெண் உள்பட2 பேர் தற்கொலைஈரோடு :ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், அன்னை சத்யா நகரை சேர்ந்த கூலி தொழிலாளி சிபி ரஞ்சன், 27; ஈரோடு, சூளையை சேர்ந்த முருகன் மகள் சீதாலட்சுமி, 23, என்பவருடன் கடந்தாண்டு ஏப்ரலில் திருமணம் நடந்தது. போதிய வருமானம் இல்லாததால் மனவேதனையில் சீதாலட்சுமி இருந்தார். கடந்த, 24ம் தேதி இரவு சீதாலட்சுமி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இறந்தார். கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்துகின்றனர்.* ஈரோடு, சூரம்பட்டிவலசு, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 54; கார் டிரைவர். புதிதாக டூவீலர் வாங்கவும், குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனை செலுத்த முடியாத மனவேதனையில் இருந்தவர் வீட்டில் சேலையால் துாக்கிட்டு கொண்டார். குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இறந்த மோகன்ராஜூக்கு, மனைவி தேவி, 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.