உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500கொள்முதல் விலை வழங்க தீர்மானம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500கொள்முதல் விலை வழங்க தீர்மானம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500கொள்முதல் விலை வழங்க தீர்மானம்நாமக்கல்:'கரும்பு டன் ஒன்றுக்கு, 4,500 ரூபாய் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்' என, பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைக்கான கூலி அதிகமாக வசூலிக்கப்படுவதை, மாவட்ட நிர்வாகம் அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் வழங்குவதுபோல், கரும்பு டன் ஒன்றுக்கு, 4,500 ரூபாய் கொள்முதல் விலையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.தமிழக விவசாயிகளுக்கு, நாட்டுப்பசு வளர்த்தல் மற்றும் அதை சார்ந்த விவசாயம் ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில அமைப்பு செயலாளர் குமார், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை