உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவை சரக டி.ஐ.ஜி., ஆய்வு

கோவை சரக டி.ஐ.ஜி., ஆய்வு

ஈரோடு: கோவை சரக டி.ஐ.ஜி., சசிமோகன், சரகத்துக்கு உட்பட்ட எஸ்.பி., அலுவலகங்களில் ஆய்வு செய்து வருகிறார். இதன்படி ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கொலை வழக்கு, மூன்று லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கொள்ளை, திருட்டு வழக்கு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க யோசனை தெரிவித்தார். மாவட்ட குற்றப்பிரி-விலும் ஆய்வு செய்து, நடப்பாண்டில் தற்போது வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கோப்புகளை பார்வையிட்டார். அப்-போது எஸ்.பி., ஜவகர், ஏ.டி.எஸ்.பி.,க்கள், ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தி, பவானி சப்- டிவிஷன் டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை