கியூ.ஆர் கோடு மூலம் காணிக்கை செலுத்த வசதி
ஈரோடு: பக்தர்கள் தங்கள் காணிக்கையை நேரடியாக செலுத்தும் வகையில், ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், கியூ.ஆர் கோடு மூலம் செலுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழிவகை செய்துள்ளது. இந்த வசதியை அமைச்சர் முத்துசாமி, கோவிலில் நேற்று தொடங்கி வைத்தார். இதில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.