விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணிஈரோடு,:ஈரோடு சி.என்.கல்லுாரி மாணவ, மாணவிகள் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நேற்று நடந்தது. கல்லுாரி வளாகத்தில் துவங்கி வ.உ.சி., பூங்காவில் நிறைவு பெற்றது. போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவியர் சென்றனர். கல்லுாரி முதல்வர் மனோகர் பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில், 140 மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணி நிறைவில் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.