குறைதீர் கூட்டத்தில் வாழ்த்து
குறைதீர் கூட்டத்தில் வாழ்த்துஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் நடந்தது. முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், சாலை வசதி, மயான வசதி உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, 285 மனுக்கள் பெறப்பட்டு, துறை ரீதியான விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.தொழிலாளர் துறை சார்பில் மூன்று பயனாளிகளுக்கு, 5.12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டுமான பணியிட விபத்து மரண நிவாரண நிதி, தீவிர நோய் பாதிப்பு உதவித்தொகை, தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் ஐந்து பேருக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மானியத்துடன் பத்திரப்பதிவு செய்து பத்திரப்பதிவு ஆணை வழங்கப்பட்டது. தமிழ் செம்மல் விருது பெற்றதை, சென்னிமலை சுப்பிரமணியன், கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.