மேலும் செய்திகள்
ரயில்வே ஊழியர் ஆர்ப்பாட்டம்
22-Mar-2025
ரயில் டிரைவர் ஆர்ப்பாட்டம்ஈரோடு:அகில இந்திய லோகோ ரயில் ஓட்டுனர் சங்கம் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க கோட்ட பொது செயலாளர் பிஷூ தலைமை வகித்தார். கோட்ட தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார். விருப்ப பணியிட மாறுதலை வழங்க வேண்டும். ரயில் டிரைவர்கள் மீதான சட்டவிரோத தண்டனை, குற்றச்சாட்டுகளை திரும்ப பெற வேண்டும். பெண் ரயில் டிரைவர்களை மிரட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பணி ஓய்வு நேரத்தில் பணிக்கு அழைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இரண்டு பெண்கள் உள்ளிட்ட, 50 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
22-Mar-2025