உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாய் குட்டியைதிருடியவர் கைது

நாய் குட்டியைதிருடியவர் கைது

நாய் குட்டியைதிருடியவர் கைதுகாங்கேயம்:திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே கொடுவாய் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, 65. தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவருடைய வீட்டின் கதவை சிலர் தட்டியுள்ளனர். ஆனால், சரஸ்வதி பயத்தில் கதவை திறக்கவில்லை. அங்கு வந்த நபர் அருகில் இருந்த பொருட்களின் மூலம், கதவை உடைக்க முற்பட்டுள்ளார். காலையில் பார்த்தபோது பிளாஸ்டிக் சேர் உடைக்கப்பட்டு, அங்கு கட்டியிருந்த நாய் குட்டியை திருடி சென்றுள்ளார். அருகில் விசாரித்ததில், நாய்குட்டி சமத்துவபுரம் பார்த்தசாரதி வீட்டில் கட்டியிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில், ஊதியூர் போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை