டாஸ்மாக் ஊழியர்கள்சார்பில் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் ஊழியர்கள்சார்பில் ஆர்ப்பாட்டம்ஈரோடு:ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன், மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் மாரிமுத்து, சிவகுமார், வேலுசாமி, சிறுத்தை வள்ளுவன், மாரிமுத்து பேசினர்.டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். படிப்படியாக இரவு பணி நேரத்தை, 2 மணி நேரமாக குறைத்து, பூரண மதுவிலக்கு அமலாக்க வேண்டும். பழிவாங்கும் நோக்கில் வலைதள செய்திகளின் அடிப்படையில் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். இ.எஸ்.ஐ., மருத்துவ திட்டத்தை டாஸ்மாக் பணியாளர்களுக்கும் நிறைவேற்ற வேண்டும். கேரளாவில் மதுக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்சம், 50,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இங்கு, 10,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதை மாற்றி உயர்த்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.