உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சகோதரியை தாக்கிய சகோதரி

சகோதரியை தாக்கிய சகோதரி

தாராபுரம், தாராபுரம், காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேபி ராஜம், 53; இவரது தாயார் மாரியம்மாள், 70; கணவர் இறந்தபின் பென்சனை வாங்கி, அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார்.பழனி அருகே உள்ள மகள் தங்கத்தாய் வீட்டில் இருந்தவர், இரு தினங்களுக்கு முன், தாராபுரத்தில் உள்ள மற்றொரு மகளான பேபி ராஜம் வீட்டுக்கு வந்தார்.இதனால் ஆத்திரமடைந்த தங்கத்தாய், அவரது மகன் சதீஷ் மற்றும் சுரேஷ் அவரது மனைவி கலையரசி ஆகியோர், பேபி ராஜம் வீட்டுக்கு வந்தனர்.தாயாரிடம் பென்சனை வாங்க திட்டமிடுகிறாயா? என கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி, நான்கு பேர் மீதும் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை