உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பற்களை பாதுகாப்பது எப்படி?

பற்களை பாதுகாப்பது எப்படி?

ஈரோடு, பற்கள் பாதுகாப்பு முறை குறித்து நம்பியூர், கோபியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அரவிந்தன் கூறியதாவது:- குழந்தைகளுக்கு முதல் பல் முளைக்கும்போதே பற்களை சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கான பிரஸ்களை கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். 6 வயது முதல் 12 வயது வரை நிரந்தர பற்கள் முளைக்கும். இவற்றில் பிளவு ஏற்பட்டு சொத்தை பல் ஏற்பட வாய்ப்புள்ளது.அதற்கு பிட் அண்ட் பிஷ்யூர் சீலண்ட் வைத்து அடைத்தால் சொத்தையை தடுக்கலாம். பற்களின் நிறத்திலேயே எனாமல் பில்லிங் கொண்டும் அடைக்கலாம். பற்களில் வலி ஏற்படும் பட்சத்தில் ஆர்.சி.டி., சிகிச்சை செய்வதால் பற்களை பாதுகாக்க முடியும். சேதமான பற்களை அகற்றிவிட்டு இம்பிளாண்ட் பற்களை பொருத்தி கொள்ளலாம். குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ பற்கள் சீராக இல்லை என்றால், அப்ளையன்ஸ் பிரேசஸ் (Braces), இன்விசிலிஜின் (Invisiligin) அல்லது தாடை அறுவை சிகிச்சை மூலம் பற்களை சீரமைத்து கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு பல் மற்றும் ஈறுகளில் நோய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க காலை, இரவில் பல் துலக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி