உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபட் களவாணி கைது

மொபட் களவாணி கைது

அந்தியூர், அந்தியூர், பச்சாம்பாளையத்தில் தங்கி கட்டட வேலை செய்பவர் மாணிக்கம், ௫௫; பர்கூர் சாலையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, யமாஹா மொபட்டை நிறுத்திவிட்டு, கட்டுமான பொருள் வாடகைக்கு விடும் கிடங்குக்கு சென்றார். திரும்பி வந்தபோது மொபட்டை ஒருவர் திருடி செல்வதை பார்த்து துரத்தி பிடித்து, அந்தியூர் போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில் அந்தியூர், தவிட்டுப்பாளையம், பழனியப்பா எட்டாவது வீதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் சசி கிரண், 19, என தெரிந்தது. போலீசார் கைது செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பவானி கிளை சிறையில் அடைத்தனர். போக்சோ வழக்கில் கைதாகி, இரு நாட்களுக்கு முன்தான், சசிகிரண் ஜாமினில் வந்தார் என்றும் போலீசார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி