மேலும் செய்திகள்
108 பால்குடம் ஊர்வலம்
20-Jul-2026
கோபி:கோபி அருகே பச்சைமலை முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, சண்முக கலச சத்ரு சம்ஹார ேஹாமம், 108 சங்காபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.முன்னதாக காலை 8:30 மணிக்கு, சண்முக கலச சத்ரு சம்ஹார ேஹாமம் நடந்தது. இதை தொடர்ந்து பச்சைமலை அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவிலில் இருந்து, 450க்கும் மேற்பட்டோர் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்றனர். அங்கு மதியம், 12:15 மணிக்கு, பாலாபிேஷகம், 108 சங்காபி ேஷகம் நடந்தது. இதை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேளதாளம் முழங்க பால்குடம் ஊர்வலம் நடந்ததால், பச்சைமலை முருகன் கோவில் விழாக்கோலம் பூண்டது.
20-Jul-2026