உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மோசடி வழக்கில் 13 ஆண்டாகதலைமறைவாக இருந்தவர் கைது

மோசடி வழக்கில் 13 ஆண்டாகதலைமறைவாக இருந்தவர் கைது

மோசடி வழக்கில் 13 ஆண்டாகதலைமறைவாக இருந்தவர் கைதுஈரோடு:கோவை, சுந்தராபுரம், சாய் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன், 45; ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உக்கரத்தில், கே.ஆர்.டிரேடர்ஸ் பெயரில் விவசாய விளைபொருள் நிறுவனம் நடத்தினார். பருத்தி விதை, புண்ணாக்கு, கிழங்கு மாவை நிறுவனத்திடம் வழங்கினால், மார்க்கெட் விலையை கூட கூடுதல் விலை தருவதாக கூறினார். சத்தியமங்கலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மற்றும் சில விவசாயிகள் விளைபொருட்களை வழங்கினார். ஆனால், தான் கூறியதை போல விளைபொருட்களுக்கு உண்டான, 2.59 லட்சம் ரூபாயை வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில், 2012ல் புகாரளித்தனர். விசாரித்த போலீசார் மோசடி வழக்கு பதிந்து, கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்தவர் தலைமறைவானார். இதனால் கிருஷ்ணனை, 13 ஆண்டாக தேடி வந்தனர்.நீலகிரி மாவட்டம் கூடலுாரில் பதுங்கியிருந்தவலரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !