விலங்கை வேட்டையாடமுயன்ற 2 பேர் கைது
சத்தியமங்கலம்:கடம்பூர் வனத்துறையினர் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். இதில் கடந்த மாத கடைசியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் இருவர் வனப்பகுதிக்குள் நுழைந்து, விலங்குகளை வேட்டையாட, சுருக்கு கம்பிகளை வைத்தது பதிவாகி இருந்தது. தீவிர விசாரணையில் அணைக்கரை கிணத்து தொட்டியை சேர்ந்த இருவர் என தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர்.