உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நந்தா பார்மஸி கல்லுாரியில்28வது பட்டமளிப்பு விழா

நந்தா பார்மஸி கல்லுாரியில்28வது பட்டமளிப்பு விழா

நந்தா பார்மஸி கல்லுாரியில்28வது பட்டமளிப்பு விழாஈரோடு,ஈரோடு அருகேயுள்ள நந்தா பார்மஸி கல்லுாரியின், 28வது பட்டமளிப்பு விழா நடந்தது. டெல்லி மருத்துவ பல்கலை துணைவேந்தர் ரவிச்சந்திரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்து பேசினார். பட்டம் பெறும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் ரவிச்சந்திரன், 150 மாணவ, -மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசினார்.விழாவில் ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன், செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !