உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானியில் தெருநாய்கள் கடித்து சிறுவர்கள் உட்பட 5 பேர் காயம்

பவானியில் தெருநாய்கள் கடித்து சிறுவர்கள் உட்பட 5 பேர் காயம்

பவானியில் தெருநாய்கள் கடித்துசிறுவர்கள் உட்பட 5 பேர் காயம்பவானி, டிச. 15-பவானியில் தெரு நாய்கள் கடித்து சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.பவானி நகராட்சி, 16வது வார்டுக்கு உட்பட்ட திருநீலகண்டர் வீதியில், அப்பகுதி சிறுவர், சிறுமியர் நேற்று மாலை விளையாடி கொண்டிருந்தனர். அங்கு சுற்றி திரிந்த இரண்டு தெருநாய்கள் திடீரென, விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை கடிக்கத் தொடங்கின. இதில் வடிவேல் மகள் பிரித்திவிகா, 10; அருண்குமார் மகள் சுபாஷிணி, 7; சரவணக்குமார் மகள் தக்ஷிதாஸ்ரீ, 6; விஜயகுமார் மகள் சஞ்சனா, 11; மண் தொழிலாளர் வீதி அன்பரசு மகன் மணிகண்டன், 29; ஆகியோர் கடிபட்டனர். இவர்கள் அலறி துடிக்கவே, சத்தம் கேட்டு பெற்றோர்கள், அப்பகுதிவாசிகள் திரண்டு, தெருநாய்களை துரத்தியடித்தனர். அதன்பின் அனைவரும் பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !