உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் நகராட்சியில் 74 தீர்மானம் நிறைவேற்றம்

காங்கேயம் நகராட்சியில் 74 தீர்மானம் நிறைவேற்றம்

காங்கேயம், காங்கேயம் நகராட்சி சாதாரண மற்றும் அவசர கவுன்சில் கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் சூர்யபிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர். இதில், 18 வார்டுகளில் குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகளில், குழாய் உடைப்பு சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். மின் மோட்டார் மற்றும் சிறு மின் விசைப்பம்பு பழுது சரி செய்தல், அம்மா உணவகத்துக்கு நிதி ஒதுக்கல், திடக்கழிவு மேலாண்மை, நகராட்சி வாகனங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் என, 68 தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து நடந்த அவசர கூட்டத்தில் குடியிருப்பு மனைப்பிரிவு அமைக்கவும், புதிய நகராட்சி அலுவலகத்திற்கு இணையதள வசதி மாற்றுதல், குடிநீர் வசதி அமைத்தல் உட்பட ஆறு தீர்மானங்கள் என, 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ