உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பின்னலாடை தொழிலாளருக்கு 9 நாட்கள் தீபாவளி விடுமுறை

பின்னலாடை தொழிலாளருக்கு 9 நாட்கள் தீபாவளி விடுமுறை

திருப்பூர், திருப்பூர் பின்னலாடை மற்றும் சார்ந்துள்ள ஜாப் ஒர்க் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, நேற்றுடன் தீபாவளி போனஸ் பட்டுவாடா நிறைவு பெற்றுள்ளது. தொழிலாளர்களுக்கு, ஒரு மாத சம்பளம் என்ற வகையில், 12 ஆயிரம் ரூபாய் துவங்கி, 30 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்பட்டுள்ளது.போனஸ் வழங்கும் முன்னதாக, கடந்த வார சம்பளத் தொகையை கொண்டு, தீபாவளி 'ஷாப்பிங்'கை துவக்கிவிட்டனர். அரசு ஊழியர்கள், பொது நிறுவன ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், நேற்று முதல் தீபாவளி பண்டிகை விடுமுறை துவங்கிவிட்டது.பின்னலாடை நிறுவனங்களில், இம்முறை, எட்டு முதல் ஒன்பது நாட்கள் வரை தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, பெரும்பாலான நிறுவனங்கள், நேற்று மாலை முதல் விடுமுறை அளித்துள்ளன.மற்ற நிறுவனங்கள், இன்று மாலை, 5:00 மணி முதல் விடுமுறை அளித்துள்ளன. அனைத்து நிறுவனங்களும், வரும் 26ம் தேதி வரை விடுமுறை அளித்துள்ள; 27ம் தேதி முதல் வழக்கமான உற்பத்தி பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளன.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, 'நிட்டிங்', சாய ஆலைகள், பிரின்டிங், எம்ப்ராய்டரிங், ரெய்சிங், காம்பாக்டிங் என, அனைத்து வகையான நிறுவனங்களும், நேற்று முதல் விடுமுறை அளித்துள்ளன. பெரிய ஏற்றுமதி நிறுவனங்களில், இன்று முதல் விடுமுறை துவங்குகிறது.திருப்பூரில் வசிக்கும் தொழிலாளர்கள், நீண்டவிடுமுறையை கொண்டாட ஏதுவாக, குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் இன்ப சுற்றுலா சென்றுவர திட்டமிட துவங்கிவிட்டனர். அதேசமயம் திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களில் பெரும்பாலானோர், சொந்த மாநிலங்களுக்கு செல்லவில்லை. போனஸ் தொகையை அனுப்பிவிட்டு, திருப்பூரிலேயே கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை