குறு மைய விளையாட்டில் காமராஜ் பள்ளி சாதனை
நம்பியூர், செப். 6-நடப்பு, 2024-25ம் ஆண்டுக்கான குறுமைய விளையாட்டு போட்டி புளியம்பட்டியில் தனியார் பள்ளியில் நடந்தது.இதில் நம்பியூர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி, 14 வயது இளையோர் எறிபந்து போட்டியில், மாணவர் மற்றும் மாணவியர் அணி முதலிடம் பெற்றது.14 வயதுக் தடகள போட்டியில் ஜீவ நிகிலேஷ், 100 மீ., மற்றும் 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதலில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். 600 மீ., இளையோர் கார்த்திகேயன் முதலிடம் பெற்றார். 17 வயது கால்பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்றது. 19 வயது தடகள பிரிவில் தமிழ்ச்செல்வன், 1,500 மீ., ஓட்டத்தில் மூன்றாமிட, 3,000 மீ., ஓட்டத்தில் முதலிடமும் பிடித்தார். 19 வயது பிரிவில் கௌசித், 400 மீ., தடை ஓட்டத்தில் இரண்டாமிடம், இதே பிரிவில் விக்னேஷ், 100 மீ., ஓட்டத்தில் முதலிடம் பிடித்தார்.விளையாட்டு போட்டிகளில் சாதனைக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணபவா, இந்துமதி ஆகியோரை பள்ளி செயலர் ஜவஹர், இணை செயலர் சுமதி ஜவகர், தலைமை ஆசிரியர் கணேஷ்குமார், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.