சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்பாட்டம்
காங்கேயம்: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்-வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார் விளக்க உரையாற்-றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.