சவுபாக்கிய மங்கள சபஸ்ரீ யாகம்
ஈரோடு: நசியனூரில் சவுபாக்கிய மங்கள சபஸ்ரீ யாகம் நேற்று நடந்தது. கூனம்பட்டி ஆதீனத்திருமடம் நடராஜ சுவாமிகள் தலைமை வகித்தார். மகா யாக பூஜைகள், சுமங்கலி, கன்னிகா, கோமாதா உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இந்த ஹோமத்தால் எதிரிகளால் ஏற்படும் பிரச்னை நீங்கும். வம்பு, வழக்குகள், அவமானம் போன்றவற்றுக்கு தீர்வு கிடைக்கும். இழந்த செல்வ, சொத்து, உறவுகளை பெற்றுத்தரும். நம்பிக்கை, உற்சாகம் உண்டாகி சகல சவுக்கியங்களும் உண்டாகும் என நடராஜ சுவாமிகள் தெரிவித்தார். யாகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.