ஜவுளி உற்பத்தியில் நீர் மேலாண்மை கருத்தரங்கு
ஈரோடு, ஆக. 25-தொழிலக கழிவு மேலாண்மை சங்கம் சார்பில், 'ஜவுளி உற்பத்தி மற்றும் செயலாக்கத்தில் நிலைத்தன்மையை சீராக்குவது, ஆற்றல் மற்றும் நீர் மேலாண்மைக்கான உத்திகள்' குறித்த கருத்தரங்கு ஈரோட்டில் நடந்தது.ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட டெக்ஸ்டைல் பிராசசர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் பழனிசாமி வரவேற்றார். மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் சுவாமிநாதன், சதீஸ்குமார், ரகுநாதன், குணசீலன் ஆகியோர், கழிவு நீர் சுத்திகரிப்பு, வள பாதுகாப்பு, மாசுபாட்டை குறைத்தல், ஜவுளி சார்ந்த துறையில் நிலையான நடைமுறை குறித்து பேசினர்.சென்னை ஐ.ஐ.டி., கல்லுாரி எனர்ஜி ஆடிட்டர் கார்த்திக், ஜவுளி துறையில் ஆற்றல் சேமிப்பு, வாய்ப்பு பற்றியும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் முதன்மை விஞ்ஞானி ரவீந்திரநாத், கழிவு நீர் சுத்திகரிப்பு தொழில் நுட்பங்கள் குறித்து பேசினர்.