ஆடிப்பூரம் அமோகம்
தாராபுரம். ஆடிப்பூரத்தை ஒட்டி, தாராபுரத்தில் புது காவல் நிலைய வீதி துர்க்கை அம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில், நுாற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். மதியம் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் அனைத்து அம்மன் கோவில்களில், ஆடிப்பூரம் விழா களை கட்டியது.