மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
03-Aug-2025
* ஈரோடு மாவட்டம் பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 1,329 காய்கள் வரத்தாகி ஒரு தேங்காய், 20.50-32.30 ரூபாய் வரை, 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 1,140 காய் வந்தது. ஒரு காய், 60 ரூபாய் முதல் 6௩ ரூபாய் வரை, 37,604 ரூபாய்க்கு ஏலம் போனது.* ஈரோடு, கருங்கல்பாளையத்தில் மாட்டு சந்தை நேற்று நடந்தது. இதில், 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 60 கன்று; 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடு; 23,000 முதல், 75,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை; 60,000 ரூபாய்க்கு மேலான விலையில் முற்றிலுமான கலப்பின மாடுகள் வரத்தாகின. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா மாநில விவசாயிகள், வியாபாரிகள் அதிகம் வந்தனர். 95 சதவீத கால்நடைகள் விற்றன.* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ ஒரு கிலோ, 1,300 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-460, காக்கடா-500, செண்டுமல்லி-120, கோழி கொண்டை-150, ஜாதி முல்லை-600, கனகாம்பரம்-700, சம்பங்கி-220, அரளி-240, துளசி-60, செவ்வந்தி- 320 ரூபாய்க்கும் விற்பனையானது.* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,007 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 61.19 முதல், 72.59 ரூபாய் வரை, 31,066 கிலோ நிலக்கடலை, 20 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.* புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று நடந்தது. சந்தைக்கு, 20 எருமை, 200 கலப்பின மாடுகள், 250 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகள், 200க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். எருமை, 20-40 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 26-48 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 25-53 ஆயிரம் ரூபாய், சிந்து மாடு, 20-40 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 40-74 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. வளர்ப்பு கன்றுகள், 6,000 முதல், 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. ஆட்டுக்குட்டி, 2,௦௦௦ ரூபாய் முதல் 4,௦௦௦ ரூபாய்; வெள்ளாடு, 6,௦௦௦ ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய்; செம்மறியாடுகள், 5,௦௦௦ ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை, கால்நடைகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றன.* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,200 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 217.49 முதல், 227.29 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 13௭ ரூபாய் முதல், 216.69 ரூபாய் வரை, 53,142 கிலோ கொப்பரை, 1.௧௫ கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, ௩௨௦ கிலோ வரத்தானது. ஒரு கிலோ, 162.72 ரூபாய் முதல், ௨௦௫ ரூபாய் வரை விலை போனது. இதேபோல் கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, ௧,௨௦௩ கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ, 217 ரூபாய் முதல், 221 ரூபாய் வரை விலை போனது.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 63 ரூபாய், நேந்திரன், 36 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், ௧,௦௦௦ ரூபாய், தேன்வாழை மற்றும் ரஸ்த்தாளி, 610 ரூபாய், பூவன், 480, மொந்தன், 390, ரொபஸ்டா, 600, பச்சைநாடான், 540 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு வந்த, 4,875 வாழைத்தார்களும், 9.84 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
03-Aug-2025