இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
அந்தியூர், அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில், மூன்றாண்டுகளாக இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செந்தில்குமார், நீலகிரி மாவட்டம், தேவாளா போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் செந்தில்குமார், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தியூரில் நாளை நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்த பின், இருவரும் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் பொறுப்பேற்பர்.