முதியவர் பலி
சத்தியமங்கலம், தாளவாடி அருகே மல்லன் குழியில், தமிழ்புரத்தில் ஒரு குட்டையில் ஆண் சடலம் நேற்று மிதந்தது. தகவலின்படி சென்ற தாளவாடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் பையனாபுரத்தை சேர்ந்த பெள்ளையா, 65, கூலி தொழிலாளி என்பது தெரிந்தது. ரோடு போடும் பணிக்கு நேற்று காலை சென்றார். மதியம் கை-கால் கழுவ குட்டைக்கு சென்றவர் தவறி விழுந்து பலியானது தெரிந்தது.