உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

அந்தியூர்:அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில் விநாயகர், போர்மன்னன், வீரமாத்தியம்மன், திரவுபதியம்மன், சப்த கன்னிமாருக்கு இன்று கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி பவானி கூடுதுறையிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். செம்புளிச்சாம்பாளையத்தில் இருந்து தீர்த்தக்குடங்களை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து தீர்த்தாபிஷேகம், சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி