சாலையோரம் கவிழ்ந்த அரசு பஸ்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் செக்போஸ்ட்டுக்கு, 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன், ஒரு அரசு பஸ் நேற்று மதியம் சென்றது. டிரைவர் ஞானசுந்தரம் ஓட்டினார். கேர்மாளம் அருகே பூதாளபுரம் வி.எம்.தொட்டி என்ற இடத்தில், எதிரே வந்த பிக்-அப் வேனுக்கு வழிவிட, சாலையோரம் ஒதுங்கிய போது, சாலையோர பள்ளத்தில் அப்படியே சாய்ந்து விட்டது. இதில், ௨௦ வயது முதல் ௫௫ வயது வரையிலான ஆண், பெண் பயணிகள் எட்டு பேர் காயமடைந்தனர். அனைவரும் கேர்மாளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்-பினர்.