உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் வாங்க மூதாட்டி மீது கொடூர தாக்குதல் தோடு, மூக்குத்தி பறித்த பிளஸ் 2 மாணவி கைது

மொபைல் வாங்க மூதாட்டி மீது கொடூர தாக்குதல் தோடு, மூக்குத்தி பறித்த பிளஸ் 2 மாணவி கைது

ஓமலுார்: புதிதாக மொபைல் போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில், மூதாட்டியை சம்மட்டியால் தாக்கி, தோடு, மூக்குத்தியை பறித்-துச்சென்ற பிளஸ் 2 மாணவியை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டியை சேர்ந்தவர் போதம்மாள், 65. இவரது கணவரும், மகனும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றனர். இந்நிலையில் மதியம், 3:00 மணிக்கு உறவினரின், 16 வயது சிறுமி, போதம்மாள் வீட்டுக்குள் வந்தார். தொடர்ந்து களை கொத்தும் சம்மட்டியால் போதம்மாள் கை, தலை பகுதி களில் பலமாக தாக்கினார். பின் அவர் அணிந்தி-ருந்த அரை பவுன் தோடு, மூக்குத்தியை கழற்றி பறித்துச்-சென்றார். மாலையில் அவரது குடும்பத்தினர் வந்தபோது ரத்த வெள்ளத்தில் மூதாட்டி கிடந்தார். உடனே அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போதம்மாள் மகன் சக்தி வேல் நேற்று அளித்த புகார்-படி, ஓமலுார் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவியை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''சிறுமி புதிதாக மொபைல் வாங்க வேண்டும் என்ற ஆசையில் மூதாட்டியை கொடூரமாக தாக்கி நகையை பறித்துள்ளார். ஓமலுார், கடைவீதியில் உள்ள ஒரு கடையில் நகையை அடகு வைத்து பணமும் பெற்றுள்ளார்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ