உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜி.எச்.,ல் சேவைகளை மேம்படுத்தக்கோரி மனு

ஜி.எச்.,ல் சேவைகளை மேம்படுத்தக்கோரி மனு

ஈரோடு; மா.கம்யூ., தாலுகா செயலர் பாலசுப்பிரமணி தலைமை யில், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், மனு வழங்கி கூறியதாவது: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு செயல்படுகிறது. அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள், கருவி இல்லை. இதனால் பெரும்பாலான பரிசோதனைகளுக்கு, சேலம் அல்லது கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.போதிய டாக்டர், செவிலியர், தொழில் நுட்ப பணியாளர், துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. லிப்ட் ஆப்பரேட்டரும் இல்லை. போதிய டாக்டர், செவிலியர்களை நியமித்தும், உரிய உபகரணங்கள், கருவிகளை வரவழைத்தும், ஏழை நோயாளிகளின் மருத்துவ சேவையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி