உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காங்கேயம்: காங்கேயத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு, சாலை பாதுகாப்பு குறித்து, காங்கேயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லாயல் இன்னாசிமேரி தலைமையில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் பத்து தடுப்பு குறித்தும், தலைக்கவசம் அணிவதின் அவசியம், காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவதின் முக்கியத்துவம் பற்றி பள்ளி மாணவ, மாணவியருக்கு எடுத்து செல்லப்பட்டது. தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், 'நோ ஹெல்மெட் நோ கீ' என்ற விழிப்புணர்வு முகாமை நடத்தினார். பள்ளி மாணவர்கள், போக்குவரத்து எஸ்.ஐ., சச்சிதானந்தம், போக்குவரத்து போலீசார், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ