குறுமைய தடகள போட்டியில் பாரதி பள்ளி சாம்பியன் பட்டம்
பெருந்துறை: பள்ளி கல்வித்துறை சார்பாக, பெருந்துறை குறுமைய விளையாட்டுப் போட்டி, விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில், 40க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் பாரதி பள்ளி மாணவ, மாணவியர் மிக மூத்தோர் பிரிவில் தருண், கோகுல், கிஷோர் கண்ணன், மூத்தோர் பிரிவில் மிதுன், இளையோர் பிரிவில் சிரதீப் மற்றும் மிக மூத்தோர் மாணவிகள் பிரிவில் தர்ஷணா, மூத்தோர் பிரிவில் பார்கவி ஆகியோர், தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில், 244 புள்ளிகளுடனும், மாணவிகள் பிரிவில், 170 புள்ளிகளுடனும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று, குறுமைய அளவில் பாரதி பள்ளி முதலிடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்கள், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வகுமார், தட்சணாமூர்த்தி, சத்தியமூர்த்தி, சாணக்கியன், அசோக்ராஜ், ஆஷா, தமிழரசி ஆகியோரை, பள்ளி தாளாளர் மோகனாம்பாள், பள்ளி தலைவர் செந்தில்குமார், போட்டி ஒருங்கிணைப்பாளர் தோப்புபாளையம் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் அருள் உள்ளிட்டோர் பாராட்டினர். பாரதி பள்ளி துணை முதல்வர் சந்திரன், நிர்வாக அலுவலர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.