உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / என்.எம்.எம்.எஸ்.,தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

என்.எம்.எம்.எஸ்.,தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு,:நடப்பு (2026--27) கல்வியாண்டில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் (என்.எம்.எம்.எஸ்.,) படிப்புதவி தொகை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் பயிலும் பள்ளி வாயிலாக வரும், 13ம் தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.21ல் ஊரக திறனாய்வு தேர்வுஈரோடு மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வு வரும், 21ல், 17 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை நடப்பாண்டு ஒன்பதாம் வகுப்பு படிக்கும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 3,575 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் அதிக மதிப்பெண் பெறும், 50 மாணவர், 50 மாணவிகளுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் என நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி