உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உழவர் சந்தைக்கு சரிந்த காய்கறி வரத்து

உழவர் சந்தைக்கு சரிந்த காய்கறி வரத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, கோபி, சத்தி, பெருந்துறையில் உழவர் சந்தைகள் உள்ளன. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு நேற்று, 31.65 டன் காய்கறி, பழங்கள் வந்து விற்றது. இதன் மதிப்பு, 10.௭௪ லட்சம் ரூபாய். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிற உழவர் சந்தைகளுக்கு, 71.71 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 24.௨௨ லட்சம் ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரங்களை ஒப்பிடுகையில், காய்கறி வரத்து நேற்று சரிந்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பே இதற்கு காரணம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி