உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஈரோடு: ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி யில், 20வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் ஜெயராமன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினரான டாடா கன்சல்டன்சி அகாடமி அலையன்ஸ் குரூப் தலைவர் டாக்டர் சுசீந்திரன் பங்கேற்றார்.- விழாவில், 812 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார். அண்ணா பல்கலை தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பிடித்த, 55 பேருக்கு, வாழ்த்து தெரிவித்து பேசினார்.வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார், செயலர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், இணை செயலாளர் ராஜமாணிக்கம், செயற்குழு உறுப்பினர்கள் குலசேகரன், சின்னசாமி, அறக்கட்டளை உறுப்பினர்கள் யுவராஜா மற்றும் பாலசுப்ரமணியம் விழாவில் கலந்து கொண்டனர். புல முதல்வர், நிர்வாக மேலாளர் பெரியசாமி, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ -மாணவியர் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !