அரசு ஊழியர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ஈரோடு: கோல்கட்டாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமையுடன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். படுகொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மாவட்ட செயலாளர் விஜய மனோகரன், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட மகளிர் அமைப்பாளர் சசிகலா தலைமை வகித்தார்.