கிரய பத்திரம் பெறாதோருக்கு வீட்டு வசதி வாரியம் அழைப்பு
ஈரோடு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ஈரோடு வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு, முத்தம்பாளையம் பகுதி - 1, 2, 4, 5, 5 ஏ, மற்றும் பெருந்துறை மற்றும் நசியனுார் சாலை திட்டங்களில் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், தவணை காலம் முடிவுற்று, வட்டி சலுகை அறிவித்தும், முழு தொகை செலுத்தி, கிரய பத்திரம் பெற்று கொள்ளாமல் உள்ளனர். இதுபோன்றோர் உடனடியாக தங்களிடம் உள்ள அசல் ரசீதுகளுடன் இந்த அலுவலகத்தை, வேலை நாட்களில் அணுகலாம். தங்கள் கணக்கை நேர் செய்து, கிரய பத்திரம் பெற்று கொள்ளலாம். தவறும் பட்சத்தில் முன்னறிவிப்பின்றி மனை ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.பிரதான குடிநீர் குழாய்உடைப்பு சீரமைப்புபுன்செய் புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அருகே மாதம்பாளையம் பஞ்., வெங்கநாயக்கன்பாளையம் பால் சொசைட்டி அருகே, பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ஓடியது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து உடைந்த குழாயை அகற்றிவிட்டு, புதிதாக குழாய் அமைக்கும் பணியில், பஞ்., நிர்வாகம் ஈடுபட்டது. இதனால் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது.